“புள்ளை புடிக்குற மாதிரி”.. உங்க கட்சிக்கு ஆட்களை புடிச்சிட்டு இருக்கீங்க – வாய் விட்ட ஆதவை விளாசிய தமிழிசை

சென்னை: தங்கள் கட்சி தான் புதிய அதிமுக என்று பகிரங்கமாக அறிவித்து, அதிமுக மூத்த தலைவர்கள், எம்எல்ஏ-க்கள், தொண்டர்கள் என பலரையும் விலைபேசி தவெக-விற்குள் இழுத்து வரும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

இந்த நிலையில் பாஜக-வுடன்கூட்டணி வைத்ததால் தான் அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதாகவும், குறிப்பாக இந்த கூட்டணி காரணமாக தான் அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார்.

தவெக முக்கிய நிர்வாகியும், தற்போதைய அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதோடு, உரிய பதிலடியையும் கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய தமிழிசை, அரசியலில் தோல்வி என்பது பல இடங்களில் சகஜமானது. ஒரு காலத்தில் வெறும் 2 எம்பி சீட்களை வைத்திருந்த நாங்கள், தற்போது நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறோம். தவிர தற்போது சுமார் 21 மாநிலங்களில் ஆளுகட்சியாக இருக்கிறோம்.

இது நாங்கள் மக்களுக்குப் பிடித்தமானவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் ஒன்று. ஆனால், நீங்களோ பிள்ளை பிடிக்கிற மாதிரி எல்லா இடத்திலும் தேடி தேடி உங்கள் கட்சிக்கு ஆட்களை பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள், நாங்கள் அப்படி இல்லை..என்று மிக காட்டமாக சாடியுள்ளார்.

Related Stories: