சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தவெகவில் இணைந்தார். அதிமுக பிரிந்தபோது ஓ.பி.எஸ்.ஆதரவாளராக சில மாதங்கள் செயல்பட்டு வந்தார் வெல்லமண்டி நடராஜன். ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் வெல்லமண்டி நடராஜன் எடப்பாடி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். தொடர்ந்து, அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தார். தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை நேரில் சந்தித்து வெல்லமண்டி நடராஜன் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி- சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கியுள்ளனர். இதனிடையே, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர்.
