கேரளத்தில் பினராயி விஜயன் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் ED ரெய்டு!

 

கேரள: கேரளத்தில் பினராயி விஜயன் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் ED ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் ரெய்டு நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பினராயி விஜயனின் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருகிறது. கொச்சின் கனிமவள முறைகேடு வழக்கு தொடர்பாக ED ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

பினராயி விஜயனின் மகள் வீணாவின் நிறுவனம் தொடர்புடைய வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எக்ஸாலாஜிக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் வீணா. எக்ஸாலாஜிக் கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூடில் நிறுவனம் இடையேயான ஒப்பந்தத்தில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: