சென்னை: சென்னை – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் தினசரி விரைவு ரயிலான செந்தூர் எக்ஸ்பிரஸில், நிரந்தரமாக 5 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு, கூடுதலாக 2 ஏசி படுக்கை மற்றும் 3 ஸ்லீப்பர் பெட்டிகள் வரும் ஜூன் 15ம் தேதி முதல் நிரந்தரமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
