விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பரிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா..?பெ.சண்முகம் கேள்வி

சென்னை: கடந்த 2 வாரங்களில் 4-வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பரிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா..? என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பான அவரது சமூக வலைதள பதிவில்:
பெட்ரோல்- டீசல் விலையை இரண்டு வாரங்களில் நான்கு முறை உயர்த்தி உள்ளது ஒன்றிய பாஜக அரசு. இன்று பெட்ரோல் ரூ 107.77 டீசல் ரூ 99.55. இதில் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல மத்திய – மாநில அரசுகள் வரிமூலம் வருவாயாக பெறுவது மட்டும் 50 சதவீதம்.

உங்களால் சர்வதேச சந்தையில் விலையை குறைக்க முடியாது. அமெரிக்கா- ஈரான் சண்டையை நிறுத்த முடியாது. விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா? அரசுக்கு வரும் வரி வருவாயில் இருந்து மக்களுக்கு விலையை குறைத்து நிவாரண வழங்க மத்திய – மாநில அரசுகள் முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: