அதிமுக முன்னாள் எம்.பி. P.வேணுகோபால் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

 

சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. P.வேணுகோபால் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக சார்பில் தொடர்ந்து இரண்டு முறை (2009 மற்றும் 2014) திருவள்ளூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2017-ல் அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக செயல்பட்ட வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் அதிமுகவில் குழப்பங்கள் வெடித்துள்ள நிலையில் அதிமுகவிலிருந்து விலகுவதாக முன்னாள் எம்பி வேணுகோபால் அறிவித்துள்ளார்.

அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு பட்டியலின மக்கள் கட்சியை புறக்கணித்ததே முதன்மை காரணம் என்றும், அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்துச் சென்ற கட்சி, தற்போது ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி நகர்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவின் தற்போதைய தலைமை அனைவரையும் அனுசரித்து போகவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள அதிமுக முன்னாள் எம்பி வேணுகோபால் கனத்த இதயத்துடன் விலகுகிறேன் எனக் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

Related Stories: