கமுதி, மே 25: கமுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர். இதில் டாக்டர் சீனிவாசன் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், டாக்டர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயசெந்தில், ஆப்டிகல் உரிமையாளர் முகமது நசீர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் இந்த முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
இதில் சிறுவர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இம் முகாமில் சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு விழித்திரை சிகிச்சை, கண்ணீர் அழுத்த நோய், மாறுகண் உட்பட பல்வேறு சிகிச்சை செய்யப்பட்டது. முகாமில் 150 பேருக்கு கண் கண்ணாடிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
