ராஜபாளையம், மே 25: பயிர் இன்சூரன்ஸ் பதிவை, தனியார் நிறுவனங்களுக்கு பதிலாக தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருநகர் மாவட்டத்தில், போதிய விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, பயிர் இன்சூரன்ஸ் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் தொடர்கதையாகி வருகின்றன.
மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியாக இல்லாமல் குறிப்பிட்ட பகுதிகளுக்கு விளைச்சல் சதவீதம் அடிப்படையில் பாதிப்புஎன்று கணக்கிட்டு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இது விவசாயிகளுக்கு பெரும்இழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இதன்படி பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு வெறும் 10, 20 சதவீதம் என இழப்பீடு அறிவிப்பது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்கிறது.
