மூதாட்டியை மிரட்டியவர் கைது

 

சிவகாசி, மே 25: திருத்தங்கல் பனையடிப்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரி(65). இவர் இரவு நேரத்தில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஆலமரத்துப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் சிங்கராஜ் (43) என்பவர், பரமேஸ்வரி வீட்டிற்குள் நுழைந்து அவரது கழுத்தில் கையை வைத்ததாக கூறப்படுகிறது.அப்போது திடுக்கிட்டு எழுந்த பரமேஸ்வரி, அவரது கையை தட்டி விட்டுள்ளார். அப்போது சிங்கராஜ் நடந்ததை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து மூதாட்டி பரமேஸ்வரி திருத்தங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிங்கராஜை கைது செய்தனர்.

Related Stories: