காரைக்குடி, மே 25: காரைக்குடி புத்தகத் திருவிழா குழு சார்பில் மாநில அளவிலான சிறுகதை போட்டிகள் நடத்தப்பட உள்ளது என புத்தகத் திருவிழா குழு தலைவர் பிவி.சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழுவின் சார்பில் அதன் முன்னாள் தலைவர் அய்க்கண் நினைவை போற்றும் வகையில் பேராசிரியர் டாக்டர் அய்க்கண் அருளரசி வசந்தா நினைவு சிறுகதை போட்டிகள் நடத்தப்பட உள்ளது. முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு 7500, 3ம் பரிசு ரூ.5000 வழங்கப்பட உள்ளது. சமூக முன்னேற்றத்தை கருப்பொருளாக கொண்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. கதைகள் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்பவர்கள் வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பிய கதைகளையோ, அல்லது வெளிவந்த கதைகளையோ அனுப்பக்கூடாது. கதைகளை திருப்பு அனுப்ப இயலாது. போட்டி முடிவுகள் நடுவர் குழுவின் தீர்ப்புக்கு உட்பட்டது. சிறுகதைகளை ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். ரவிச்சந்திரன், செயலாளர், குறளகம், 24\1 தெய்வராயன் தெரு, நா.புதூர், காரைக்குடி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளுக்கான பரிசுகள் ஜூலை 3 முதல் 12 வரை நடக்கவுள்ள புத்தக திருவிழாவில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 93607 36735 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
