முருகன் கோயிலில் கிராம மக்கள் பூஜை

கிருஷ்ணகிரி, மார்ச் 4: போகனப்பள்ளி கிராமம் முருகன் கோயிலில் கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மட்டுமின்றி, அண்டைய மாநிலமான ஆந்திராவில் இருந்தும் ஏராளமான காளைகள் பங்கேற்றன. இந்த விழா எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடந்ததற்காக, காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில், கிராம மக்கள் நேற்று சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதில் போகனப்பள்ளி கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>