டெல்லி: தமிழ்நாட்டில் ஜூன் 18ம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சி.வி.சண்முகம் ராஜினாமாவை தொடர்ந்து காலியாக உள்ள இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுதாக்கல் செய்ய கடைசிநாள் – ஜூன் 8; ஜூன் 9 மனுக்கள் மீது பரிசீலனை மனு வாபஸ் பெற ஜூன் 11 ஆகும்.
