தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கெங்கவல்லி, மார்ச் 3: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வுக்காக முககவசம் கட்டாயம் என்ற பேனர் வைத்துள்ளனர். இதில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் உள்ளது. எனவே, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், இந்த பேனரை உடனடியாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேபோல், கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகம் முன் மறைந்த முன்னாள் முதல்வர்கள்  எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவச்சிலைகள் உள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் இந்த சிலைகளை மூடியவர்கள், நேற்று மாலை 5 மணிக்கு சிலைகளின் மீது இருந்த துணியை அகற்றிவிட்டனர். அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>