×

மைக்ரோ கிரீன்ஸ் சாலட்

தேவையான பொருட்கள்:
மைக்ரோ கிரீன்ஸ் (பாசிப்பயறு, கொத்தமல்லி, அல்ஃபால்ஃபா போன்றவை) 1 கப்
வெள்ளரிக்காய் 1 (நறுக்கியது)
காரட் 1 (துருவியது)
தக்காளி 1 (நறுக்கியது)
வெங்காயம் ½ (விருப்பம்)
எலுமிச்சைச் சாறு 1 டீஸ்பூன்
மிளகு தூள் ½ டீஸ்பூன்
உப்பு தேவைக்கு
தேன் 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
ஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்).

செய்முறை:
மைக்ரோ கிரீன்ஸை நன்றாக கழுவி தண்ணீர் வடிக்கவும். ஒரு பாத்திரத்தில் வெள்ளரிக்காய், காரட், தக்காளி, வெங்காயம் சேர்க்கவும். அதில் மைக்ரோ கிரீன்ஸ் சேர்த்து மெதுவாக கலக்கவும். எலுமிச்சைச் சாறு, மிளகு தூள், உப்பு சேர்க்கவும். விருப்பமிருந்தால் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். சுவையான மைக்ரோ கிரீன்ஸ் சாலட் தயார்.

 

Tags :
× RELATED குடைமிளகாய் குருமா