மின்சார ரயில் சேவை : கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி நேரமாக ரத்து

சென்னை: செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் காட்டாங்குளத்தூர் பணிமனையில் இன்று முதல் 20, 21 ஆகிய தேதிகளில் காலை 11:30 மணி முதல் மாலை 3 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை கடற்கரையில் இருந்து காலை 10:56, 11:40 மற்றும் மதியம் 12:28 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து மதியம் 12:00, 1:10 மற்றும் 1:45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையேயும், செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையேயும் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: