திறமைத் தேடல் தேர்வு ஊக்கத்தொகை தகுதி பட்டியல் வெளியீடு

 

சென்னை: அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 2025-26ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு கடந்த ஜனவரி 31ம் தேதி நடந்தது. இந்த தேர்வின் மதிப்பெண்கள் விவரங்கள் மே 13ம் தேதி அரசுத் தேர்வுகள் இயக்கக இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

தற்போது இந்த தேர்வில் மாணவ, மாணவியர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவ, மாணவியர் (500 மாணவர், 500 மாணவியர்) விவரங்கள் அடங்கிய தெரிவுப்பட்டியல்களை அரசுத் தேர்வுகள் இயக்கக இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஊக்கத் தொகைக்கான தெரிவுப்பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: