கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருச்சி, மே 15: திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கடந்த 13ம்தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அன்வர்பாஷா(28), என்பவரை பொன்மலை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: