குன்னம் அருகே உள்ள நன்னை மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

குன்னம், மே15: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்துள்ள நன்னை கிராமத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மகா மாரியம்மன் வீதி உலா வந்தது. 9ம் திருவிழாவான நேற்று வாணவேடிக்கை மற்றும் தாரை தப்பட்டை , மேளதாளத்தோடு சுவாமிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக காலை 10 மணி அளவில் கோயில் நிர்வாகம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் திருத்தேர் திருவீதி உலா நடைபெற்றது.

பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 6 மணி அளவில் கோவில் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த தீமிதி திடலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. நன்னை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் துபாய் சிங்கப்பூர் நண்பர்கள் செய்திருந்தனர். குன்னம் காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

 

Related Stories: