அரியலூர் ஜூலை 27: அரியலூர் மாவட்டத்தில் “சமூக நல்லிணக்க ஊராட்சி” விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்பிகலாம் என்று மாவட்ட கலெக்டர் மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது: அரியலூர் மாவட்டத்தில் ”சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையும் அதனுடன், சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதும் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. இதனடிப்படையில் 2026-27 ஆம் ஆண்டிற்கான “சமூக நல்லிணக்க ஊராட்சி” விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்ப படிவத்தினையும், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/social_award_app_26_27.pdf என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து 31.07.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தெரிவித்துள்ளார்.
