லாரி மோதியதில் பெயிண்டர் பலி

 

ஈரோடு, மே 15: ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதி காந்திஜி நகரை சேர்ந்தவர் மருதையன் (50). பெயிண்டர். இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை ரங்கம்பாளையத்தில் இருந்து ஆணைக்கல்பாளையம் செல்லும் ரிங் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் கொண்டான்காட்டூர் கூத்தம்பூண்டியை சேர்ந்த ராகுல் (30) ஓட்டி வந்த காஸ் சிலிண்டர் லாரியும், மொபட்டும் மோதின. இதில், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் மருதையன் பலியானார்.

Related Stories: