சிவகிரியில் ரூ.10.68 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

 

 

கொடுமுடி,மே15: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 425 நிலக்கடலை மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 67.61 காசுக்கும், அதிகபட்ச விலையாக 85.80 காசுக்கும், சராசரி விலையாக 78.90 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 13,614 கிலோ எடையுள்ள நிலக்கடலை 10 லட்சத்து 68 ஆயிரத்து 794 ரூபாய்க்கு விற்பனையானது.

Related Stories: