மதுபோதையில் தவறி விழுந்த தொழிலாளி பலி

 

சத்தியமங்கலம், மே 12: புஞ்சை புளியம்பட்டியில் இருந்து மாதம்பாளையம் செல்லும் சாலையில் கண்ணப்பர் மஹால் எதிர்புறம் தரைப்பாலத்தின் அடியில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டர். அதில் அந்த நபர் மாதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மோகன்ராஜ் (38) என்பதும், இவர் திருமணம் ஆகாத நிலையில் கிடைக்கும் கூலி வேலை செய்து கொண்டு மது போதையில் சுற்றித் திரிந்ததும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தரைப்பாலத்தின் அருகே மது அருந்தியபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: