×

காயத்தால் நாடு திரும்பிய ஓவர்டன்

 

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டனின் தொடை தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், அதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பிரிட்டன் புறப்பட்டு சென்றுள்ளார். இத்தகவலை சென்னை அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

ஓவர்டன் எப்போது இந்தியா திரும்புவார் என்ற தகவலை சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவிக்கவில்லை. ஓவர்டன் காயத்தால் சொந்த நாடு திரும்பியுள்ளது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. பேட்டிங், பவுலிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Overton ,Chennai ,Chennai Super Kings ,Jamie Overton ,Britain ,Overton… ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி..!