×

தாய்லாந்து பேட்மின்டன்; முந்தினார் சிந்து

 

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 16 போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 16 போட்டியில் நேற்று, இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க் வீராங்கனை அமாலி ஸூல்ஸ் உடன் மோதினார்.

போட்டியின் துவக்கம் முதல் சீறிப்பாய்ந்து துடிப்புடன் புள்ளிகளை குவித்த சிந்து, முதல் செட்டை 21-13 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் அந்த செட்டை 21-15 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதி சுற்றுக்கு அசத்தலாய் முன்னேறினார்.

 

Tags : Thailand Badminton ,Sindhu ,Bangkok ,PV Sindhu ,Thailand Open badminton ,Bangkok, Thailand.… ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி..!