×

வெற்றி கொடி கட்டி சுற்றி சுழன்ற சிந்து: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறினார். தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஒபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 32 போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபே வீராங்கனை சி துங் உடன் மோதினார்.

துவக்கம் முதல் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய சிந்து, முதல் செட்ைட 21-9 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக், ஜப்பான் வீராங்கனை நட்சுகி நிதைரா மோதினர். முதல் செட்டில் சிறப்பாக ஆடிய தேவிகா, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். 2வது செட், 21-13 என்ற புள்ளிக் கணக்கில் நட்சுகி வசம் சென்றது. இருப்பினும் 3வது செட்டில் சுதாரித்து அட்டகாசமாக ஆடிய தேவிகா, 21-15 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற தேவிகா, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags : Sindhu ,BANGKOK ,THAILAND OPEN ,BADMINTON ,VIRANGAN ,B. V. ,SINDH ,Thailand Open Badminton ,Bangkok, Thailand ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 193...