×

சில்லிபாயிண்ட்…

* பேட் கமின்ஸுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
அகமதாபாத்: குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தோல்வியை சந்தித்தது. அகமதாபாத் நகரில் நடந்த அந்த போட்டியின்போது, சன்ரைசர்ஸ் பந்து வீச்சாளர்கள் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இதையடுத்து, சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கமின்ஸுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சன்ரைசர்ஸ் அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், கேப்டன் கமின்ஸுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

* குஹன்-சந்தேஷ் இணை தேசிய ஸ்குவாஷில் அபாரம்
சென்னை: சென்னையில் நேற்று நடந்த தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் போட்டியில் குஹன் செந்தில் குமார், சந்தேஷ் இணை, நமன் சுரானா, பிரணவ் அகர்வால் இணையுடன் மோதியது. சிறப்பாக ஆடிய செந்தில்குமார் இணை, 11-1, 11-2 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடக்கும் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார், ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் அபய் சிங்குடன் இணை சேர்ந்து ஆடவுள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் அவர், ஜோஷ்னா சின்னப்பாவுடன் இணை சேர்ந்து ஆடுவார்.

* ஈஎல்எல் கால்பந்து சவுதாம்ப்டன் வெற்றி
சவுதாம்ப்டன்: ஈஎல்எல் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் நேற்று, சவுதாம்ப்டன், மிடில்ஸ்பரோ அணிகள் மோதின. போட்டி துவங்கி 5வது நிமிடத்தில் மிடில்ஸ்பரோ அணியின் ரைலி மெக்ரி முதல் கோல் போட்டு அசத்தினார். அதைத் தொடர்ந்து, 45+1வது நிமிடத்தில் சவுதாம்ப்டன் அணியின் ராஸ் ஸ்டீவர்ட் தனது அணிக்காக முதல் கோல் போட்டார். அதன் கோல் விழாமல் போட்டி டிராவை நோக்கி சென்றது. இரு பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் கூடுதல் நேரத்தில், 116வ நிமிடத்தில் சவுதாம்ப்டன் அணியின் ஷியா சார்லஸ் அட்டகாசமாக கோலடித்து அசத்தினார். அதனால், 2-0 என்ற கோல் கணக்கில் சவுதாம்ப்டன் வென்றது.

Tags : Chillipoint… ,Pat Cummins ,Ahmedabad ,Sunrisers Hyderabad ,IPL ,Gujarat Titans ,Sunrisers ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 193...