வீரமநல்லூர் மகா மாரியம்மன் கோயிலில் தேரோட்ட விழா

குன்னம், மே 14: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்துள்ள வீரமநல்லூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோயிலில் தேரோட்ட விழா நடைபெற்றது. கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மகா மாரியம்மன் வீதி உலா வந்தது. 6ம் திருவிழாவான நேற்று வாணவேடிக்கை மற்றும் தாரை தப்பட்டை, மேளதாளத்தோடு சுவாமிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காலை 10 மணி அளவில் கோயில் நிர்வாகம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வீரமநல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் இரா வரதராஜன், மு.கந்தசாமி, குமார், ரெங்கசாமி, துரைசாமி, செந்தில் ஆகியோர் செய்து இருந்தனர்.

பூஜை ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள் பரமசிவம், கொளஞ்சிநாதன், மாயவேல் ஆகியோர் செய்தனர். குன்னம் காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

 

Related Stories: