பெரம்பலூர்,மே 14: குன்னத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது என செயற் பொறியாளர் அசோக் குமார் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோரின் குறைவிற்கும் கூட்டம் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியம் குன்னம் அலுவலகத்தில் நாளை 15 ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
குன்னம் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை கூட்டத்திற்கு வந்து நேரிலோ எழுத்துப் பூர்வமாகவோ அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே குன்னம் கோட்டத்திற்குட்பட்ட கிராம மின் நுகர்வோர்கள் இந்த கூட்டத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு மின்வாரிய செயற்பொறியாளர் அசோக் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
