குன்னம், மே 14: பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலமாக செயல்படுத்தப்படும் சாலைப்பணிகள் குறித்து நபார்டு மற்றும் கிராம சாலைகள் திருச்சி வட்டத்தின் கண்காணிப்புப்பொறியாளர் தலைமையிலான உள் தணிக்கை குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் பெரம்பலூர் உட்கோட்டத்தில் கொளக்காநத்தம்-கருடமங்களம் சாலை, குன்னம் உட்கோட்டத்திற்குட்பட்ட மாத்தூர்-திட்டக்குடி சாலை மற்றும் வேப்பந்தட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட பாலையூர்-அனுக்கூர்-வாலிகண்டபுரம் சாலைகளில் அகலப்படுத்தி மேம்படுத்துதல் போன்ற சாலைப்பணிகளை நபார்டு மற்றும் கிராம சாலைகள்,
திருச்சி வட்ட கண்காணிப்புப்பொறியாளர் தர்மராஜ் தலைமையிலான உள் தணிக்கை குழுவினர் நேரில் பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது புதுக்கோட்டை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டப்பொறியாளர் சீனிவாசன், பெரம்பலூர் கோட்டப்பொறியாளர் கலைவாணி, உதவிக்கோட்டப் பொறியளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் உடனிருந்தனர்.
