குடியாத்தத்தில் மதுபோதையில் தகராறு வாலிபர் படுகொலை: திருச்சியில் தம்பியை கொன்ற அண்ணன்

 

 

குடியாத்தம்: குடியாத் தத்தில் மதுபோதையில் தகராறில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். திருச்சியில் தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்றார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கஸ்பா பகுதியை சேர்ந்தவர் காமராஜ் மகன் முகேஷ்(18). அதே பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு(28). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளிகள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் அஞ்சுமன்ரோடு பகுதியில் இருவரும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த விஷ்ணு, கட்டையை எடுத்து முகேஷின் தலையில் சரமாரி தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த முகேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை முகேஷ் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஷ்ணுவை கைது செய்தனர்.

திருச்சி: திருச்சி பெரியமிளகுபாறையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (44). திருமணமாகாதவர். இவரது சகோதரர் பழனிசாமி (46). இருவருக்கும் பெரியமிளகுபாறையில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பில் 4 தளங்களில் வீடுகள் உள்ளது. பழனிசாமி தரைத்தளத்திலும், கிருஷ்ணமூர்த்தி முதல் தளத்திலும் வசித்து வந்தனர். மற்ற வீடுகள் அனைத்தும் வாடகைக்கு விடப்பட்டது. வாடகை பெறுவதில் சகோதரர்கள் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகளப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த பழனிசாமி, தனது சகோதரர் கிருஷ்ணமூர்த்தியை மண்வெட்டியால் நெற்றி, தலை, கண் மற்றும் வாயில் சரமாரி தாக்கினார். இதில் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்த உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பழனிசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: