எங்களுக்கு விழுந்த வாக்குகளை காட்டியே முதல்வரானதை மறந்துவிட்டீர்களா CM சார்?: முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி பதிலடி

சென்னை: எங்களுக்கு விழுந்த வாக்குகளை காட்டியே முதல்வரானதை மறந்துவிட்டீர்களா CM சார்? என முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். “நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்கள் செல்லவில்லை. நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். முழுக்க முழுக்க திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி அமைத்தோம். எங்களுக்கு விழுந்த வாக்குகளை காட்டியே முதல்வரானதை மறந்துவிட்டீர்களா CM சார்?’ என உதயநிதி தெரிவித்துள்ளார்.

Related Stories: