கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் விரைவில் துவங்கவுள்ள மலர் கண்காட்சி

கொடைக்கானல்: சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் 63வது மலர் கண்காட்சி இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதில் மலர் படுக்கைகள் தயார் செய்து லட்சக்கணக்கான நாற்றுகள் மூன்று கட்டமாக நடப்பட்டன. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆசியாடிக் லில்லி, ஓரியண்டல் லில்லி மற்றும் கிழங்குகள் நடப்பட்டது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ரோஜாக்கள் உட்பட சுமார் 29 வகையான லட்சக்கணக்கான மலர்கள் பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன.

தற்போது பிங்க், மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் பூக்கள் பூக்க துவங்கி உள்ளது. மாலை வேளையிலும் சுற்றுலாப் பயணிகள் மலர்களை கண்டு ரசிப்பதற்காக வண்ணமயமான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகப் பூங்காவைப் பார்வையிடும் அனுமதி நேரமும் மாலை 7 மணி வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: