திருப்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பணியில் இருந்த போலீஸ் உட்பட 6 பேர் பலி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே விபத்தில் சிக்கிய லாரி மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த குறுக்குத்தி பகுதியில் காவல் துறை சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இன்று அதிகாலை இந்தச் சோதனைச் சாவடியில் வெள்ளகோவில் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ரவிச்சந்திரன் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கரூரில் இருந்து வந்த லாரி ஒன்று சோதனைச் சாவடியில் இருந்த டிவைடர்(Divider) மீது மோதி விபத்துக்குள்ளானது, இதனால் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவலர் ரவிச்சந்திரனும் லாரி ஓட்டுனரும் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது காங்கேயத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த லாரி மற்றும் காவலர் ரவிச்சந்திரன் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த பெண் உட்பட 4 பேரும் குறிப்பாக காவலர் ரவிச்சந்திரன் மற்றும் லாரி ஓட்டுனர் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிரிழந்தோர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து விபத்தில் இறந்தவர்கள் யார் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

 

Related Stories: