சென்னை: சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி தான் ஆளுங்கட்சி பெற்றுள்ளது. மீதமுள்ள 3.21 கோடி பேர் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது.நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு செய்கிறோம். எம்.எல்.ஏக்களை கடன் பெற்று தவெக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதால் தமிழ்நாட்டின் கடன் பற்றி விஜய் பேசுகிறார். அவகாசம் என கூறி நீண்ட காலம் காக்க மக்களை வைக்காதீர்கள் என்று கூறினார்.
