கோடை விடுமுறை, முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: கோடை விடுமுறை, முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 80 பேருந்துகளும், நாளை மறுநாள் 620, 16-ம் தேதி 655 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து 15, 16, ம் தேதிகளில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: