எடமணல் துணை மின்நிலைய பகுதியில் நாளை மின் நிறுத்தம்

சீர்காழி, மே 13: எடமணல் துணை மின் நிலைய த்தில் மின் பராமரிப்பு பணியையொட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகு திகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீர்காழி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட எடமணல் துணை மின் நிலையத்தில் நாளை (14ம் தேதி) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திட்டை, செம்மங்குடி, கட வாசல், எடமணல், திருக்கருகாவூர், திருமுல்லைவாசல், வேட்டங்குடி, தொடுவாய், திருநகரி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று உதவி செயற்பொறியாளர் அனுராதா தெரிவித்துள்ளார்.

 

Related Stories: