கொல்லங்கோடு அருகே கல்லூரி மாணவி மாயம்

நித்திரவிளை, மே 25: கொல்லங்கோடு அருகே சூசைபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் சகாயராஜன். இவரது மகள் மினி மெர்சி (20). கல்லூரி மாணவி. சம்பவத்தன்று மதியம் வீட்டிலிருந்த மினி மெர்சி திடீரென மாயமாகியுள்ளார். உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் பலன் இல்லை.

மாணவி எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக சகாயராஜன் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்

 

Related Stories: