பாதை இடத்தை அடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தூத்துக்குடி, மே 25:தூத்துக்குடி ஆவுடையார்புரம் பகுதியில் உள்ள இடங்களை தனியார் சிலர் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன்பேரில் அங்கு குடியிருந்து வந்த சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை காலி செய்து சென்றுவிட்டனர். தற்போது சுமார் 10 குடும்பத்தினர் அங்கு வசித்து வருகின்றனர். இந்த இடம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் பாதை இடத்தை வாங்கியவர்கள் நேற்று அடைக்க முயன்றுள்ளனர். அப்போது, அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு பாதையை அடைக்கும் முயற்சியை அவர்கள் கைவிட்டு சென்றனர். மேலும் தமிழக முதல்-அமைச்சர், தங்கள் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: