மாநில அளவில் வேளாண் பயிற்சி முகாம்

ஸ்பிக்நகர், மே 25: வேளாண் துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்து மாநில அளவிலான வேளாண் பயிற்சி முகாம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ் வழிகாட்டுதலின் பேரில் தூத்துக்குடி வட்டார விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.

முகாமில், முனைவர் ப்ரீத்தா வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்தும், முனைவர் கதிரவன் நவீன வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்தும், முனைவர் இந்துராணி காய்கறி பயிர்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்தும், முனைவர் குமார் பழப்பயிர்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்தும் பேசினர்.

இதையடுத்து வேளாண் விளைப் பொருட்களை மதிப்பு கூட்டுதலுக்கான இயந்திரங்களின் வகைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து முனைவர் வாணி விளக்கிக் கூறியதோடு பயிற்சி அளித்தார். தனியாரிடம் விதைகள் வாங்குவதை தவிர்த்து, வேளாண் பல்கலைக்கழகம் ஆராய்ந்து ஆண்டுதோறும் உருவாக்கும் புதுப்புது ரக விதைகளை விவசாயிகள் வாங்கி பயன் பெறுமாறு முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், ஒட்டு ரக செடிகளை உருவாக்கும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டது.  அப்போது விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பேராசிரியர்களும், பயிற்சியாளர்களும் விளக்கம் அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை, வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர் சுடலைமணி, உதவி தொழில் நுட்ப மேலாளர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Related Stories: