புரியவில்லை.. ஒரு ஜோதிடருக்கு ஏன் சிறப்புப் பணி அதிகாரி பதவி.? விஜய்க்கு காங்., எம்.பி கேள்வி

சென்னை: தமிழக முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி வழக்கப்பட்டிருப்பதற்கு, தவெக கூட்டணிக்கு உள்ளேயே எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டுள்ள விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராக இருக்கும் ரிக்கி ரத்தன் பண்டிட்டிற்கு அரசு பதவி வழங்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு அதிகாரிக்கான பணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அரசின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டிருப்பது பற்றி ஏதாவது ஒரு விளக்கத்தை அளிக்க முடியுமா என்று கேட்டுள்ளார் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில். ஜோதிடருக்கு அரசு பதவி ஏன் வழங்கப்பட்டது என்று புதிதிக பொறுப்பேற்றுள்ள அரசு உரிய விளக்கம் அளிக்குமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டில், ” எனக்கே புரியவில்லை. ஒரு ஜோதிடருக்கு ஏன் OSD (சிறப்புப் பணி அதிகாரி) பதவி தேவைப்பட வேண்டும்? யாராவது விளக்க முடியுமா?” என்று கேட்டுள்ளார்.

 

Related Stories: