எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் கலசபாக்கம் அருகே கடலாடியில்

கலசபாக்கம், மார்ச் 1: கலசபாக்கம் அருகே கடலாடியில் நேற்று நடைபெற்ற விருது விழாவில் இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.கலசபாக்கம் அடுத்த கடலாடியில் மாசி மாதப் பவுர்ணமியையொட்டி முதலாம் ஆண்டு எருதுவிடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. இதில் குறிப்பிட்ட நேரத்தில் சீறிப்பாய்ந்து வேகமாக ஓடி இளக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ₹30,000, இரண்டாவது பரிசாக ₹25 ஆயிரம், மூன்றாவது பரிசாக ₹20,000 ஆயிரம் என 101 பரிசுகள் வழங்கப்பட்டன. எருதுவிடும் விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் பங்கேற்று சீற்ப்பாய்ந்து வந்த காளைகளை விரட்டினர்.

Related Stories:

>