மதுபோதையில் தகராறு பெயிண்டர் அடித்துக் கொலை

திருச்சி மே 12: திருச்சி பாலக்கரை சந்தியப்பார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் (45) பெயிண்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் ஆரோக்கியராஜ் (53), மரிய பிரதாப் (43) பெயிண்டரான இவர்களுக்கு இடையே மதுபோதையில் பணம் கொடுக்கல் வாங்கலில் தகாராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த 2 பேரும், பெஞ்சமினை தாக்கினர். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அலெக்ஸ் ஆரோக்கியராஜ் மற்றும் மரியபிரதாப் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: