சுதந்திரத்திற்கு பிறகு தொழிலாளர் உரிமைக்கு மிகப்பெரிய பின்னடைவு: காங். கருத்து

புதுடெல்லி: நாடு முழுவதும் தொழிலாளர் சட்டங்களை சீர்த்திருத்த 4 புதிய தொழிலாளர் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட இந்த சட்டங்களுக்கான இறுதி விதிகளுக்கான அரசிதழ் வெளியிடப்பட்டு தற்போது முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மோடி அரசாங்கம் தனது வழக்கமான கோழைத்தனமான பாணியில், சட்டப்பேரவை தேர்தல்கள் முடிவடையும் வரை காத்திருந்து, மே 8 மற்றும் 9ம் தேதிகளில் தொடர் அரசிதழ் அறிவிப்புகள் மூலம் 4 புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை அறிவித்துள்ளது. இந்தச் சட்டங்கள் எப்போது வேண்டுமானாலும் பணியிலிருந்து நீக்கும் கொள்கைகள், ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான குறைந்தபட்ச வாய்ப்புகளையே அளிக்கின்றன. பிரதமரின் தொழிலதிபர் நண்பர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் இந்த சட்டங்கள், சுதந்திரத்திற்குப் பிறகு தொழிலாளர் உரிமைகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. இவ்வாறு கூறி உள்ளார்.

Related Stories: