டிரம்ப் விதித்த 10% வரிகள் நியாயமற்றவை: அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

 

வாஷிங்டன்: கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகளை, கடந்த பிப்ரவரி 20ம் தேதி அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் தனது வரி விதிப்பு வியூகத்தை மாற்றிய டிரம்ப், 1974ம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் 122வது பிரிவைப் பயன்படுத்தி, இந்தியா உள்பட உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில்,நேற்று முன்தினம் அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் டிரம்பின் 10 % வரி விதிப்பு செல்லாது என தீர்ப்பளித்தது. வர்த்தகப் பற்றாக்குறையை அவசரக் கால நெருக்கடியாகக் கருத முடியாது என்றும், சட்டப்பிரிவு 122-ஐ தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் 2-1 என்ற அடிப்படையிலான இந்தத் தீர்ப்பு, டிரம்ப் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு நடவடிக்கைகள் முடியும் வரை மற்ற அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் இந்தத் தற்காலிக வரிகள் தொடரும் என்பதை உறுதிப்படுத்துகிறது.எனினும் இதன் பலன் 2 தனியார் இறக்குமதியாளர்களுக்கும் மற்றும் வாஷிங்டன் மாகாணத்திற்கும் மட்டுமே பொருந்தும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: