நயினார் நாகேந்திரன் அறிவிப்பு ஆட்சியை கைப்பற்றும் எந்தவொரு முயற்சியிலும் பாஜ இணையாது

 

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ இடம் பெற்றிருந்தது. இதில் பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் உதகமண்டலம் தொகுதியில் போட்டியிட்ட போஜராஜன் மட்டுமே வெற்றி பெற்றார். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாஜ முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் முடிவுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான எந்தவொரு முயற்சியிலும் பாஜ தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் கட்சியானது எவ்வித நேரடிப் பங்களிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை. மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: