தவெகவில் விஜய்யை 2ம் கட்டத் தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள்: சிந்தனைச் செல்வன்

சென்னை: வி.சி.க., இடதுசாரிகளிடம் கூசாமல் ஆதரவு கேட்பது என்ன நியாயம்?. 5வது தலைமுறை வாரிசு அரசியலை சுமக்கும் காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு வாரிசு அரசியல் பேசுவது நகைமுரண் என வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் ‘தமிழ்நாட்டில் கொல்லைப் புறம் வழியாக ஆளுநர் ஆட்சியை திணிக்க பாஜக முயற்சிக்கிறது. அசாதாரண சூழலை கையாளுவதில் தடுமாறிப் போயிருக்கிறாரா விஜய். தவெக 2ம் கட்டத் தலைவர்களின் தவறான வழிகாட்டுதலால் விஜய்க்கு ஆதரவு கிடைக்கும் வழி அடைத்து வைப்பு. தவெகவில் விஜய்யை 2ம் கட்டத் தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள். வாட்ஸ் ஆப்பில் ஆட்சி அமைக்க ஆதரவு கோரிவிட்டு பதில் எதிர்பார்ப்பதை எப்படி புரிந்துகொள்வது?’ எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: