சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி துவங்கி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த தேர்வில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். இதில் முக்கியப் பாடங்களில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள்;
*தமிழ் 83 பேர்
*ஆங்கிலம் 21 பேர்
*இயற்பியல் 105 பேர்
*வேதியியல் 632 பேர்
*உயிரியல் 784 பேர்
*கணிதம் 732 பேர்
*தாவரவியல் 31 பேர்
*விலங்கியல் 18 பேர்
*கணினி அறிவியல் 6,945 பேர்
*வணிகவியல் 683 பேர்
*கணக்குப் பதிவியல் 1,946 பேர்
*பொருளியல் 440 பேர்
*வரலாறு 282 பேர்
*கணினிப் பயன்பாடுகள் 2,099 பேர்
*வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 463 பேர்
* ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை -16,024
* ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை – 1,695.
