சென்னை: சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் 11 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆதரவு அளித்தது. பெரும்பான்மைக்கு 6 எம்.எல்.ஏக்கள் தேவைப்படுகிறது. இதனால், கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிகவிடம் விஜய் ஆதரவு கோரியுள்ளார். இந்த நிலையில் விசிக மாநில முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர்.
இதை கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது ஆர்.என்.ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜய்யிடம்? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
