ஒன்றிய தணிக்கை வாரிய தலைவராக சசி சேகர் நியமனம்

சென்னை: ஒன்றிய திரைப்பட தணிக்கை வாரிய (சென்சார் போர்ட்) தலைவராக பிரசூன் ஜோஷி பதவி வகித்து வந்தார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த அவர், பிரபல பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக இருந்தவர். தணிக்கைக்கு வரும் திரைப்படங்களை பார்வையிட்டு சான்றிதழ் வழங்கும் சென்சார் போர்டின் தலைவராக, கடந்த 2017 முதல் பிரசூன் ஜோஷி பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், திரைப்பட சென்சார் போர்டின் புதிய தலைவராக சசி சேகர் வெம்பட்டி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதன்படி, இன்று முதல் 3 ஆண்டுகளோ அல்லது மறு உத்தரவு வரும் வரையிலோ இப்பதவியில் அவர் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சசி சேகர் வெம்பட்டி, தற்போது சென்சார் போர்ட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: