தேர்தல் நடத்தை விதிகள் அமல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

காஞ்சிபுரம், மார்ச் 1: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பிரதி திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்த பின்னரே மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.  எனினும் இதற்கு மாற்று ஏற்பாடாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள குறைதீர் பெட்டியில் இட்டுச்செல்லலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>